திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழிப்பகுதியில் உணவை தேடி 5 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது.
அப்பகுதி நாய்கள் மானை துரத்தி கடித்ததில் மானிற்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றி முதலுதவி அளித்தனர்.
உணவு தேடி ஊருக்குள் புகுந்த மானை கடித்துக் குதறிய நாய்கள் - தற்போதைய திருப்பத்தூர் செய்திகள்
திருப்பத்தூர்: நாய்கள் கடித்துக் குதறிய மானை மீட்ட பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Handing over of deer trapped by dog near Ambur to forest department
இந்த தகவலறிந்து வந்த வனத்துறையினர் காயமடைந்த மானை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.