திருப்பத்தூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜனதாபுரம்,வெள்ளக்குட்டை, குள்ளப்பனூர், கணவாய்புதூரில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
அதேபோன்று வளையாம்பட்டு, கிரி சமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது.
நாள் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை! - Hail
வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை