தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது! - திருப்பத்தூர்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tirupattur forest
Gun seized

By

Published : Dec 17, 2020, 6:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி காப்புக்காட்டுப் பகுதியில் நேற்று (டிச. 16) இரவு ஆம்பூர் வனச்சரக பயிற்சி காவலர் சுரேஷ் தலைமையிலான வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொது அப்பகுதியில் சந்தேகத்திற்க்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்க்கொண்டபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (49), பைரப்பள்ளி காப்புக்காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள குணசேகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவரிடமிருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் வெள்ளையனை உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் - சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்

ABOUT THE AUTHOR

...view details