திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழுக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் கே.சி.வீரமணி கூறியதாவது, "தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கிய காலம் முதல் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம்.