தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரண்ட் கட்டான நேரத்தில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நபர் கைது - Grandmother sexually abused

திருப்பத்தூர் அருகே நேற்றிரவு கரண்ட் கட்டான நேரத்தில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நபர் கைது
நபர் கைது

By

Published : May 20, 2022, 1:09 PM IST

Updated : May 24, 2022, 6:10 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் முருகன் (47). இவர் மதுபோதையில் நேற்றிரவு (மே.19) 11 மணி அளவில் கரண்ட் கட்டான நேரத்தில் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மூதாட்டியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சூப்பர் மார்கெட்டில் ரூ.17 ஆயிரம் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு

Last Updated : May 24, 2022, 6:10 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details