தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு அலுவலர் - ADMK protest against DMK party

அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர், அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 14, 2022, 10:04 PM IST

அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அரசு அலுவலர்

திருப்பத்தூர்:மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன் ரத்து என அதிமுகவினர் திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்து, வாணியம்பாடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் அன்பரசன் என்பவர் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மண்டல மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் அவர்களிடம் கேட்டபோது, 'ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் அன்பரசன் தற்போது பணியில் தான் உள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘என்னைக் காப்பாற்றுங்கள்’ - துபாயில் இருந்து கோரிக்கை வைத்த கடலூர் இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details