திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், விவேக். இவர், ப.உ.ச நகர் பகுதியிலுள்ள குப்பை கிடங்கிற்குச் சென்று குப்பைக்கு தீ வைத்து எரித்து, எரியும் குப்பை முன்பு, ஸ்லோ மோஷனில் நடந்து வந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, தனது மாஸை காட்டினார்.
கடந்த சில நாள்களாகவே விவேக் ஒரு மாஸ் வீடியோ எடுக்க வேண்டும் என சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரிலீஸான கேஜிஎஃப் படத்தை போல, பேக்ரவுண்டில் தீ எரிந்து புகை மண்டலங்களுக்கு இடையே இருந்து விவேக் மாஸ் என்ட்ரி கொடுத்து ரீல்ஸ் எடுத்துள்ளார்.
ஒரு வழியாக கனவு நினைவானதாக எண்ணி, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்போது திருப்பத்தூரில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் நகராட்சி ஊழியரே இதுபோன்று பொறுப்பில்லாமல் ரீல்ஸ் வீடியோ எடுத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.