தமிழ்நாடு

tamil nadu

டாஸ்மாக் பார் ஆக மாறிய கால்நடை மருத்துவமனை!

By

Published : Mar 5, 2022, 5:18 PM IST

ஆம்பூர் அருகே அரசு கால்நடை மருத்துவமனை ஒன்று, பலரும் மது அருந்தும் இடமாக மாறி சமூக விரோதிகளின் கூடாரமாக உருமாற்றமடைந்துள்ளது.

கால்நடை மருத்துவமனை மது கூடமாக மாறிய நிலை
கால்நடை மருத்துவமனை மது கூடமாக மாறிய நிலை

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவமனை வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் போதை ஆசாமிகள், கால்நடை மருத்துவமனை வளாகத்தை திறந்து, மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்தும், சாராய பாக்கெட் மற்றும் குப்பைகள் ஆகியவற்றை மருத்துவமனை வளாகத்திலேயே வீசி வருகின்றனர்.

மேலும் மிட்டாளம் கிராமம், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனின் சொந்த கிராமம் ஆகும். அவரது கிராமத்திலேயே அமைந்துள்ள அரசு மருத்துவமனை மிகவும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோடை காலம் தொடங்கிய நிலையில், கால்நடை மருத்துவமனை வாரத்தில் அனைத்து நாள்களிலும் திறக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகளை சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:எட்டு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் நீக்கம்.... அண்ணாமலை திடீர் முடிவு...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details