திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் சிவனருள், சார் ஆட்சியர் வந்தனாகர்க், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதுல்ய மிஸ்ரா, திருப்பத்தூர் மாவட்டம் இந்த மூன்று மாதத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் நமாஸ் மேடு பகுதியில் நரிகுறவர்களுக்காக 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நரிகுறவர்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்ட அரசு அலுவலர்கள் மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் அங்குள்ள நரிக்குறவர்களுக்கான பள்ளிக்கூடத்தை பார்வையிட்டு, மாணவர்களிடம் கற்பித்தல் குறித்து நலம் விசாரித்தார். நரிக்குறவர்கள், முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ராவிற்கு பாசிமணியை அன்பளிப்பாக வழங்கி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை!