தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைகள் சாக்கடையைவிட மோசமாக உள்ளது - கமல்ஹாசன் - Government hospitals are worse

திருப்பத்தூர்: அரசு மருத்துவமனையைச் சென்று பார்த்தால் அது சாக்கடையைவிட மோசமாக உள்ளது; அவையெல்லாம் மாற வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal
kamal

By

Published : Jan 6, 2021, 4:48 PM IST

Updated : Jan 6, 2021, 5:27 PM IST

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையெட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அதன்படி, இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் பரப்புரையில் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் ஒரு அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தும் கடமை உங்களுடையது. அதன் கருவியாக இருக்கவேண்டியது என்னுடைய கடமை.

மக்கள் நீதி மய்யம் ஒரு மூன்று வயது குழந்தை, இது நடக்காது காணாமல்போய்விடும் என்று விமர்சகர்கள் சொல்ல சொல்ல, நீங்கள் மக்கள் நீதி மய்யம் என்கின்ற குழந்தையை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இப்பொழுது உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு ஆயுதம் மக்கள் நீதி மய்யம், இங்கே வழக்கமாக அரசியல்வாதிகள் வாக்குறுதியை அள்ளி வீசுவார்கள், ஆனால் நான் உங்களுடைய வாக்குறுதிகளைக் கேட்கிறேன். நேர்மையை ஆதரியுங்கள் ஏன் தெரியுமா இங்கு வருகிறவர்கள் யாரும் பிரியாணி கொடுப்பார்கள் என்று வரவில்லை, என்னை நம்பி வந்திருக்கும் கூட்டம், இந்தக் கூட்டம் ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் எல்லோரும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்துகொள்ள வேண்டும்.

கமல்ஹாசன் பரப்புரை
ஆம்பூர் மக்கள் குடிக்கும் குடிநீர் உலகத்தரத்தில் இல்லை என்று சொல்கிறார்கள், டிடிஎஸ் (TOTAL DISSOLVED SOLID) இன் அளவு (நீரில் உள்ள திடப்பொருளின் அளவு) 2500-ஐ கடந்துள்ளது. ஆனால் சரியான நீர் சுத்திகரிக்கும் ஆலையை கொண்டு பராமரித்தால் இந்தக் குறை நீங்க வாய்ப்பு உண்டு.
எங்கு பார்த்தாலும் திறந்த வெளிசாக்கடை பின்பு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும். அரசு மருத்துவமனையைச் சென்று பார்த்தால் அது சாக்கடையைவிட மோசமாக உள்ளது அவையெல்லாம் மாற வேண்டும்" என்று பேசினார்.
Last Updated : Jan 6, 2021, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details