திருப்பத்தூர்மாவட்டம் ஆம்பூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுகோவிந்தாபுரம் பகுதியில் அமேசான் ஆன்லைன் வணிக குடோன் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது 22 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (அக் 17) காலை இதன் மேற்பாற்வையாளர் கோபி குடோனை திறந்துள்ளார்.
அப்போது குடோனின் பின்பக்க சுவற்றில் துளையிடப்பட்ட நிலையில், மேசை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.