திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த உமாராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் தனது வீட்டிற்கு வெளியே மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மனைவி அலமேலு கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிகரெட் வாங்கியுள்ளார். பின்னர் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு ஷாம்பு வேண்டுமென கேட்டு உள்ளார்.
அப்போது அலமேலு ஷாம்புவை எடுத்து வர முயன்றபோது, கடைக்குள் நுழைந்த இளைஞர் அவரை தாக்கி கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.