தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பேருந்தில் கஞ்சா கடத்தல் - 2 நபர்கள் கைதான நிலையில் 3ஆவது நபரும் பிடிபட்டார்! - டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள்

ஆம்பூரில் அரசுப்பேருந்தில் கஞ்சா கடத்திய சம்பவத்தில், மூன்று வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Ganja
Ganja

By

Published : Aug 9, 2022, 6:40 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்தில், டிக்கெட் பரிசோதகர் உமாபதி, பிச்சை ஆகியோர் தலைமையிலான குழுவினர் அரசுப்பேருந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு குளிர்சாதன பேருந்தில் டிக்கெட் பரிசோதனை செய்தனர். அப்போது, 2 இளைஞர்கள் வைத்திருந்த பைகளை சோதித்ததில், அதில் கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்ததனர். இதையடுத்து அலுவலர்கள் உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சாவைப்பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் ஒடிஷா மாநிலத்தைச்சேர்ந்த சரத் மாலிக், ரஞ்சித் குமார் என்பதும், இவர்கள் ஓசூரில் உள்ள ஒருவரிடமிருந்து கஞ்சாவை வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஓசூர் சென்ற போலீசார், அங்கிருந்த பல்ராம் மாலிக் என்னும் மூன்றாம் நபரைக் கைது செய்தனர். கைதான மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய் இறந்த துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து மகள் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details