திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 200ஆண்டுகள் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. வருடா வருடம் மார்கழி மாதம் கோயில் பரம்பரை அறங்காவலர் பத்மநாபன் ரெட்டியார் குடும்பத்தினர், கெங்கையம்மன் ஆலய விழா கமிட்டி குழு சார்பில் 40 அடி உயர தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில், இந்தாண்டு கரோனா ஊரடங்கால் தேர் திருவிழா எளிமையான முறையில் கொண்டாடபட்டது. தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மனுக்கு காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.