தமிழ்நாடு

tamil nadu

சினிமா பட பாணியில் நடந்த கொள்ளை: போலீஸ் விசாரணை

By

Published : Jul 24, 2021, 10:16 AM IST

Updated : Jul 24, 2021, 10:44 AM IST

வாணியம்பாடியில் சினிமா பட பாணியில் காரில் சென்றவர்களிடம் ரூ.25 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற வழிப்பறி கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சினிமா பட பாணியில் நடந்த கொள்ளை
சினிமா பட பாணியில் நடந்த கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பைனான்சியர் ஞானசேகரன். இவர் தனது காரில் ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துகொண்டு நண்பர்களுடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

ரூ.25 லட்சம் கொள்ளை

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஞானசேகரனின் காரை மடக்கி காரில் இருந்தவர்களை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு காரிலிருந்த பணத்தை எடுத்துகொண்டு தப்ப முயன்றனர்.

ஆனால், ஞானசேகரனின் நண்பர்கள் கொள்ளை கும்பலை மடக்கினர். அப்போது அவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. இதில், கார் கண்ணாடிகள் உடைந்தன. ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்திலிருந்து 100 அடி பள்ளத்தில் வீசிவிட்டார். இதனால் காரில் தப்பமுடியாது கொள்ளை கும்பல் அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடினர்.
காவல் துறை விசாரணை

இது குறித்து ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளையர்கள் விட்டுச் சென்ற காரை சோதனை செய்தபோது காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், பதிவு எண்னை பார்த்தபோது அதில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட 2 பதிவு எண்கள் பொருத்தியிருந்ததையும் காவல் துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, காரை கைப்பற்றிய காவல் துறையினர் அதிலிருந்த பேன்கார்டு, ஆதார் அட்டைகள், காவல் துறையினர் பயன்படுத்தும் தொப்பி உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூதாட்டமே காரணம்

முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் என்பவர் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அதில் வெற்றி பெற்ற பணம் சுமார் 25 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இதில், ஏற்பட்ட மோதலால் பணம் கொள்ளை போனதும் விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை

மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து ஞானசேகரன், அவரது நண்பர்களிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:முதியவர்களை குறிவைக்கும் ஏடிஎம் திருடன் கைது

Last Updated : Jul 24, 2021, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details