தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்!

இன்று முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடிய ஆதரவற்றவர்களுக்கு காவல் துறை மூலமாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

உணவு வழங்கல்
உணவு வழங்கல்

By

Published : Apr 25, 2021, 5:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர அனைத்து விதமான வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உணவின்றி வாடும் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிட சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார். இதன் பேரில் ஆதரவற்றவர்களுக்கு இன்று மதியம் காவல் துறை சார்பாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் ஊரடங்கு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாணியம்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, பேருந்து நிலையத்தில் இருந்த ஆதரவற்றவற்றோருக்கு காவல் துறை மூலம் ஏற்பாடு செய்திருந்த உணவு பொட்டலங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார்.

அப்போது அவர்களிடம், குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர், ஊரடங்கு காலங்களில் சமூக தொண்டு நிறுவனங்கள் மூலமாக உணவினைப் பெற்று தொடர்ந்து, ஆதரவற்றவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் வழங்குமாறு பிற காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இவரது செயல்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details