தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு இலவச மோர், நீர் - திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு! - காவலர்களுக்கு காவல்துறை சார்பில் பழச்சாறு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு காவல்துறை சார்பில் இலவச மோர், தண்ணீர் வழங்கப்பட்டது.

tpt
tpt

By

Published : Mar 1, 2023, 7:20 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் நிலவழகன் முன்னிலையில் பணியில் உள்ள காவலர்களுக்கு மோர், தண்ணீர் மற்றும் பழச்சாறு ஆகியவை வழங்கப்பட்டது.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் காவலர்களுக்கு மோர், தண்ணீர், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினார். கோடை காலம் முடியும் வரை காவலர்களுக்கு மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்படும் என்று போக்குவரத்து ஆய்வாளர் லட்சுமணன் தெரிவித்தார்.

கடும் வெயிலில் மக்கள் பணியாற்றும் காவலர்களின் உடல்நலனிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம்' - வேட்டைகார சமூக மக்கள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details