தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு - ஆம்பூரில் லாரி மீது வேன் மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே லாரியின் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கோர விபத்து
கோர விபத்து

By

Published : Mar 31, 2022, 4:06 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ஆஸ்டன் காலணி என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் ஆம்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, வேன் சோலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கள்ளானது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

கோர விபத்து

இந்த விபத்தில் வேன் ஓட்டுநரும், 3 பெண் தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவு ரத்து

ABOUT THE AUTHOR

...view details