தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

திருப்பத்தூரில் கஞ்சா, பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது
பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

By

Published : Jul 27, 2021, 2:12 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூ டவுண் ஜீவா நகரைச் சேர்ந்தவர் டீல் இம்தியாஸ். இவர் சென்னையில் பழைய இரும்பு பொருள்கள் வாங்கி விற்பனை (SCRAP) செய்யும் தொழில் செய்துவருகிறார்.

இவரது வீடு, அலுவலகங்களில் கஞ்சா, பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர், இம்தியாஸ் வீடு, அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

நான்கு பேர் கைது

அப்போது, அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள், 10 செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும், அலுவலகத்தில் இருந்த ரஹீம், பசல், சலாவுதீன், கரன்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் என்பவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

அலுவலகத்திற்கு சீல்

பயங்கர ஆயுதங்கள், கஞ்சா ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வஹா உத்தரவின்பேரில் வருவாய்த் துறை அலுவலர்கள் இம்தியாஸ் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

வாணியம்பாடியில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நேரத்தில் தகவல் கொடுத்து தடுத்த மாவட்ட தனிப்பிரிவு காவல் துறையினர், 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: திமுக நிர்வாகி அடித்து கொலை - காய்காறி வியாபாரி கைது

ABOUT THE AUTHOR

...view details