தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி இயங்கிய காலணி தொழிற்சாலைகளுக்கு சீல்! - காலனி தொழிற்சாலைகளுக்கு சீல்

திருப்பத்தூர்: ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூர், வாணியம்பாடியில் இயங்கிவந்த இரண்டு காலணி தொழிற்சாலைகளுக்கு கோட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் சீல் வைத்தனர்.

தடையை மீறி இயங்கிய காலணி தொழிற்சாலைகளுக்கு சீல்!
For violation of ban Shoe factories was sealed

By

Published : Aug 9, 2020, 6:50 PM IST

தமிழ்நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், குறைந்த அளவு பணியாட்களை கொண்டு ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் உள்ள இரண்டு தனியார் காலணி தொழிற்சாலைகள் இயங்குவதாக வாணியம்பாடி கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோட்டாட்சியர் காயத்ரி சுப்பரமணியத்தின் தலைமையிலான அலுவலர்கள், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள மெர்குரி காலணி தொழிற்சாலைக்கும், ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் உள்ள பாலார் காலணி தொழிற்சாலைக்கும் விரைந்தனர்.

அங்கு, குறைந்த பணியாட்களை கொண்டு காலணிகள் தயாரித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு தொழிற்சாலைகளுக்கும் சீல் வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details