ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும், கரோனா தொற்று காரணமாக சரியான முறையில் உடல்நிலையை கவனிப்பதற்கும் பரோல் வழங்க வேண்டி அவரது தயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, அவருக்கு புழல் சிறையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.