தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்கிட்டுத் தற்கொலை - கணவர் மீது குற்றச்சாட்டு - பெண் தற்கொலை காரணமாக கணவரிடம் விசாரணை

வாணியம்பாடி அருகே தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை
பெண் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Jul 1, 2022, 10:52 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியைச்சேர்ந்தவர் விஜய். இவரும் பெரியபேட்டை சவுக்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது.

தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால், வினோதினி இன்று (ஜூலை 01) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பலூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு வந்த வினோதினியின் உறவினர்கள் கணவர் விஜயை விரட்டி விரட்டி தாக்க முயற்சி செய்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் விஜயை மீட்டுச் சென்றனர். அப்போது பெண்ணின் உறவினர்கள் காவல் துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை

அதன் பின்னர் வினோதினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:பிகார்: மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details