திருப்பத்தூர்:நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆம்பூர் நகராட்சிக்குட்ப்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக தனியார் வங்கி ஏடிஎம்யிற்கு பணம் நிரப்ப தனியார் நிறுவனம் ரூ.11 லட்சம் வாகனம் மூலம் எடுத்துச்சென்ற போது, அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்க்கொண்டனர். அப்போது பணம் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.