திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்த நிலையில் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் தரைப்பாலத்தை பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூழ்கடித்துள்ளது.
பாலாறு வெள்ளப்பெருக்கில் விளையாட்டு.. போலீஸ் விடுத்த வார்னிங்! - கனமழை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் நிலையில் போலீஸ் பாதுகாப்பையும் மீறி பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்கின்றனர்.
வெள்ளம் மூழ்கடித்த தரைப்பாலத்தை ஆபத்தை உணராமல் கடக்கும் பொதுமக்கள்
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் போக்குவரத்தை துண்டித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தைக் கடந்து செல்கின்றனர். ஆபத்தை உணராமல் இளைஞர்கள் செல்பி எடுத்து வருகின்றனர், இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இதையும் படிங்க:பேருந்து மோதி விபத்து; பைக்கில் சென்றவர் பலி