திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் கடந்த 7.11.2022 அன்று அடகு கடையில் 10 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இக்கொள்ளைச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூன்று தனிப்படை அமைத்து குற்றாவளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வெங்கிளி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பெரியாங்குப்பம் பகுதியில் அடகுகடையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.