தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு விற்பனைக் கடையை தொடங்கிவைத்த அமைச்சர் வீரமணி! - தீபாவளி பண்டிகை

திருப்பத்தூர் : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக் கடையை வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி இன்று (நவ.07) தொடங்கி வைத்தார்.

பட்டாசு கடையை திறந்து வைத்த அமைச்சர் வீரமணி
பட்டாசு கடையை திறந்து வைத்த அமைச்சர் வீரமணி

By

Published : Nov 7, 2020, 2:24 PM IST

தீபாவளிப் பண்டிகை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனைக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரிலுள்ள கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக் கடையில் தீபாவளிப் பட்டாசு விற்பனையை வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் இன்று (நவ.07) தொடங்கி வைத்தனர்.

தற்போது, பல்வேறு ரகங்களில், குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் தள்ளுபடி விலையிலும் இந்தப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பட்டாசு வகைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடிக்கும் வகையில் பசுமைப் பட்டாசுகளும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தமிழ்நாடு சுகாதாரத்துறை சாதனை!

ABOUT THE AUTHOR

...view details