தமிழ்நாடு

tamil nadu

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம்

By

Published : Jan 20, 2021, 3:55 PM IST

திருப்பத்தூர் : கந்திலி அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீவிபத்து : 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
ஊதுபத்தி தொழிற்சாலையில் தீவிபத்து : 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நரியனரி பகுதியில் வசித்து வருபவர் ரத்தினம் என்பவரின் மகன் வேலு இவர் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் விலை உயர்ந்த 15 மெஷின்கள் மற்றும் ஊதுபத்தி தயாரிக்கும் உபகரணங்கள் இருந்துள்ளன. இந்த ஊதுபத்தி தயாரிக்கும் கம்பெனியில் 20க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வழக்கம்போல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஊதுபத்தி தயாரிக்கும் பணியை மேற்கொண்ட பின்பு சுமார் 5 மணி அளவில் தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மின்கசிவு ஏற்பட்டு சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலை ஜன்னல் வழியாக புகை வருவதை கண்டு தொழிற்சாலை உரிமையாளர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி தயார் நிலையில் வைத்திருந்த ஊதுபத்தி பண்டல்கள் மற்றும் விலை உயர்ந்த மெஷின்கள், ஊதுபத்தி தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவை தீக்கிரையாகி சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மத்திய அரசு நடவடிக்கை: புத்துயிர் ஊதுபத்தி தொழில்

ABOUT THE AUTHOR

...view details