திருப்பத்தூர்மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு மலைவாழ் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப்பயின்று வருகின்றனர். மேலும் அரசு சார்பில் ஐந்து பேர் விடுதியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விடுதியில் சண்முகம் மனைவி ருக்மணி (57) என்பவர், இரவு நேர பெண் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று (ஜூன் 28) இரவு விடுதியை சுற்றி வரும்பொழுது, எதிர்பாராதவிதமாக கட்டுவிரியன் பாம்பு ருக்மணியை கடித்துள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.