வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் துரைவர்மா (49). அவருடைய மகள் மோகனபிரீத்தி (13). இவர் மூன்று நாட்களுக்கு முன்பு புதிதாக Okinawa எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். நேற்று(மார்ச் 26) தனது வீட்டின் ஹாலில் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டுவிட்டு உள்ளே மகளுடன் தூங்கி உள்ளார். நள்ளிரவில் திடீரென ஸ்கூட்டரில் தீப்பிடித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட நச்சுப்புகை வீடு முழுவதும் சூழ்ந்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரது உடலையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் "துரைவர்மா வீடியோகிராபர் வேலை பார்த்துவந்தார். விபத்தின்போது அவரது மனைவி உடன் இல்லை. அதிக புகை காரணமாக அவர்களால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. கழிவறைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் உயிரிழந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடும்போது வாகன நிறுவனங்கள் கொடுக்கும் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்சார வாகன வல்லூநர்கள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரே ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான சைபர் தாக்குதல்