திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபர். இவர் பைனான்ஸ், ரியல் ஸ்டேட் தொழில் செய்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி முதல் மனைவிக்கு 1 ஆண் 1 பெண் குழந்தை உள்ள நிலையில், முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன.
இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால், மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் காரணமாக சென்னையில் இருந்தபோது அங்கே 2 குழந்தையின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தன் கணவனைப் பிரிந்து இவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.