தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டையின் கரையை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் புகார் - Tirupattur Latest News

திருப்பதூரில் கம்மியம்பட்டு புதூர் பகுதியில் உள்ள குட்டையை ஜேசிபி மூலம் அகற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குட்டையின் கரையை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் புகார்!
குட்டையின் கரையை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் புகார்!

By

Published : Feb 1, 2023, 8:27 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கம்மியம்பட்டு புதூர் பகுதியில் காப்புக்காடு அடிவாரத்தில் 3:30 ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டை உள்ளது. இந்த குட்டை மூலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் பயன்பெறுகின்றன.


இந்த நிலையில் புதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென குட்டையில் சில பகுதியை தங்களின் குடும்ப சொத்து எனக்கூறி கரையை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்துள்ளார். பல ஆண்டுகளாக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இருந்த குட்டையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கோரி அப்பகுதி மக்கள் கம்மியம்பட்டு புதூர் கிராம நிர்வாக அலுவலர் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரிகள் வரை பல்வேறு மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கம்மியம்பட்டு புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது, ஏரிக்குட்டை கரையை உடைத்தவர்கள் குறித்து உரிய விசாரணை மேற்க்கொண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டி' - ஓபிஎஸ் அணியினர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details