திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் மாச்சம்பட்டு, பாலூர் காப்புக்காட்டுப்பகுதி அடிவாரத்தில் இரண்டு ஏக்கருக்கும் மேலாக நெல், மாங்காய் போன்றவற்றை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஏப். 7) இவரது விளை நிலத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு, காட்டுப்பகுதியில் சென்றுள்ளது.
ஒற்றைக் காட்டு யானையால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் விவசாய விளைநிலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டாம் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களை சேதப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒற்றைக் காட்டு யானை ஆந்திர வனப்பகுதியிற்கு விரட்ட வேண்டும் எனவும், மீண்டும் விளைநிலங்களுக்கு யானைகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ''மலையாளியின் மாஸ்டர் ப்ளான்' - மருத்துவக் கழிவுகளால் சீரழியும் கோவை'