திருப்பத்தூர்:குரும்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (71). இவர் அதே பகுதியில் தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் விவசாயம் செய்து வருகிறார். நெல் பயிர்களை எலிகள் நாசம் செய்வதால் எலிகளை கொல்ல விவசாய நிலத்தில் எலி மருந்து வைத்துள்ளார்.
21 மயில்கள் பலி - விவசாயி கைது - எலி மருந்தை உண்டு 21 மயில்கள் பலி
விவசாய நிலப்பகுதிக்கு இரை தேடி வந்த 21 மயில்கள் எலி மருந்தை உண்டு உயிரிழந்த சம்பவத்தில் விவசாயியை காவல் துறையினர் கைது செய்தனர்.
மயில்கள் பலி
இந்நிலையில் விவசாய நிலப்பகுதிக்கு இரை தேடி வந்த 21 மயில்கள் எலி மருந்தை உண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் வனத்துறையினர் உயிரிழந்த மயில்களை மீட்டு, சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்க தயார் - எஸ்.வி.சேகர்