திருப்பத்தூர்: ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் இன்று மாலை தனது வேளாண் நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த மயில்களுக்கு அரிசியில் விஷம் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த அரிசியை உண்ட ஏழு மயில்கள் உயிரிழந்தன.
அரிசியில் விஷம் வைத்த விவசாயி: 7 மயில்கள் மரணம் - விஷம் வைத்த அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்ததுள்ளது
ஆலங்காயம் அருகே நாட்டின் தேசிய பறவையான மயிலுக்கு விஷம் வைத்த விவசாயியை வனத் துறையினர் கைதுசெய்தனர்.
மயிலுக்கு விஷம் வைத்த விவசாயி
இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் வனத் துறையினர் ரமேஷை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: பிப். 8இல் நீட்டுக்கு எதிரான சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம்