திருப்பத்தூர்:ஆம்பூர் பகுதியில் பிரபல நட்சத்திர உணவகத்தின் உரிமையாளர் முகமது சாதிக். இந்நிலையில் இவரது உணவகத்தில் நேற்று (ஜூன் 29) அதிமுக 36ஆவது வார்டு கிளைச் செயலாளர் தயாளன், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் உணவு உண்ண வந்துள்ளனர்.
அப்போது தங்களுக்கு சேமியா வருவலே வேண்டுமெனக் கூறி, உணவக உரிமையாளர் முகமது சாதிக், உணவக ஊழியர்கள் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுத் தாக்கியுள்ளனர்.