திருப்பத்தூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவருக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் நொண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் செல்வகுமார் மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் மருந்து கடை நடத்தி வரும் நிலையில், செல்வகுமார் குடும்ப பிரச்சனை காரணமாக சில மாதங்களாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் விரக்தியடைந்த செல்வகுமார் நேற்று மாலை மாதனூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.