திருப்பத்தார் மாவட்டம் புதுப்பேட்டை அருகேயுள்ள பாரதிநகரைச் சேர்ந்தவர் சித்திரவர்மன் ( 33 ). இவர் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணன் ( 29 ) என்பவர் மீது நேற்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அந்தப் புகாரில் நாராயணன் போலியான காவல் துறை அடையாள அட்டையை பயன்படுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், 17 IPC ( பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டையை பொது ஊழியர் அல்லாதோர் பிறரை ஏமாற்றும் நோக்கில் பயன்படுத்துவது - 3 மாதங்கள்வரை சிறை தண்டனை ), 465 IPC ( பிறரை ஏமாற்றுதல் - 2 ஆண்டுவரை சிறை தண்டனை ), 468 IPC (ஏமாற்றுவதற்கென பொய்யான ஆவணத்தை தயாரித்தல் - 7 ஆண்டுவரை சிறை தண்டனை)- சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், போலி காவல் துறை அடையாள அட்டையை பயன்படுத்தி நாராயணன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.