மகாராஷ்டிரா மாநிலம் சைன் பகுதியில் கள்ளநோட்டுகள் அதிகளவு புழக்கத்தில் இருப்பதாக சைன் பகுதி காவல் துறையினருக்குப் புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் கள்ளநோட்டு அச்சடிப்பதாகவும், அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக அப்பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.