திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த அயித்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மாணவி தோல்வி அடைந்திருந்தார். இதனால் அவரின் பெற்றோர் அடிக்கடி திட்டிவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி சிறிது நாட்கள் அவரது பாட்டி வீட்டில் இருந்த நிலையில், நேற்று மீண்டும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு தயாராக தனது சொந்த ஊருக்குச் சென்றார். அப்பொழுது மாணவி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.