தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 23) முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் - திருப்பத்தூர் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில், ( மெர்குரி ஷுஸ்) ஊரடங்கு உத்தரவை மீறியும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பேரூராட்சி அலுவலர்கள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்தனர்.