தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் நிரம்பிய ஆண்டியப்பனூர் அணையில் நீர் திறப்பு

திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணை நீர்தேக்கம் நிரம்பிதால் அதிலிருந்து ஏரிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆண்டியப்பனூர் அணை
ஆண்டியப்பனூர் அணை

By

Published : Nov 18, 2021, 4:41 PM IST

திருப்பத்தூர்மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் 27.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆண்டியப்பனூர் அணை 8 மீட்டர் உயரம் கொண்டது. தொடர் மழை காரணமாக அணையின் மொத்த கொள்ளளவான 112.2 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது.

இந்த அணை மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, இதன் மூலம் 2ஆயிரத்து 55 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2ஆயிரத்து 970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2ஆயிரத்து 55 ஏக்கர் நஞ்சை நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும்.

ஏரிகளில் நிரம்பி வழியும் நீர்

இந்நிலையில் தற்போது அணை நிரம்பி மொத்த கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்த நீர் சின்னசமுத்திரம், வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுளம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிகுட்டை ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது.

மற்றொரு கிளை கணமந்தூர், புதுக்கோட்டை ஏரி வழியாக திருப்பத்தூர் பெரியேரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும்.

ஆண்டியப்பனூர் அணையில் நீர் திறப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக தற்போது உதயேந்திரம், பள்ளிப்பட்டு, சிம்மனபுதூர், பொம்மிக்குப்பம், மாடப்பள்ளி, பெருமாபட்டு, விண்ணமங்கலம், பசலிகுட்டைி, துளசிபாய் உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதையும் படிங்க:'முல்லைபெரியாறு அணை; மனுக்கள் துன்புறுத்துகின்றன'- உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details