திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட தாமலேரிமுத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி அலுவலர்கள் சோதனை செய்தனர். இச்சோதனையில் பாமக, அதிமுக கட்சித் துண்டுகள், வேட்டிகள், சீருடை, விசிறி, துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை தேர்தல் விதிமுறையை மீறி கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.
அமைச்சர் வீரமணி மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு! - திருப்பத்தூர் அண்மைச் செய்திகள்
திருப்பத்தூர் : தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் வீரமணி மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு
இது தொடர்பாக ஜோலார்பேட்டை அதிமுக தேர்தல் குழு பொறுப்பாளர் அழகிரி, அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான வீரமணி, பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் விக்ரம், கார் ஓட்டுநர், கார் உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தொடரை வெல்லப்போவது யார்? இறுதி ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து!