சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பறக்கும் படையினரின் பறிமுதல் வேட்டை சூடு பிடிங்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சந்திரபுரம் நாட்டார்வட்டம் பகுதியில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோரின் படம் பொறித்த கைப்பையில், புடவைகள் வைத்து வாக்காளர்களுக்கு அக்கட்சி நிர்வாகிகள் வழங்கி வந்துள்ளனர்.
புடவையில் அமைச்சர் படம்: பறிமுதல் செய்த பறக்கும் படை - தேர்தல் செய்திகள்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை தொகுதியில், அமைச்சரின் புகைப்படத்துடன் விநியோகம் செய்யப்பட்ட புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அமைச்சர் படத்துடன் புடவை விநியோகம்! பறக்கும் படையினர் பறிமுதல்
இந்த தகவல் அறிந்த, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், விநியோகம் செய்த சுமார் 50க்கும் மேற்பட்ட புடவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை துணியால் கட்டி சீல் வைத்து திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேப்போன்று ஜோலார்பேட்டை பகுதியிலும், ஐந்து புடவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: லலிதா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை!