திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லை வெலதிகாமணிபெண்டா பகுதியில், ஆம்பூர் தேர்தல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ. 6 லட்சம்,6 சவரன் தங்க நகை பறிமுதல் - ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகை பறிமுதல்
அப்பொழுது, ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 6 சவரன் தங்கம் மற்றும் ரூ. 6 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:பாஜகவுக்கு எதிராக 'ஒன்றிணைவோம் வா' - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு