தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயம்! - Street dogs control

திருப்பத்தூர் நகர் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கடித்ததில் ஒரு சிறுமி உள்பட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் தெரு நாய்கள் அட்டகாசம்.. 8 பேர் காயம்!
திருப்பத்தூரில் தெரு நாய்கள் அட்டகாசம்.. 8 பேர் காயம்!

By

Published : Dec 28, 2022, 12:49 PM IST

திருப்பத்தூர்: கோட்டை தெரு பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகிறது. இந்த நிலையில் ஜின்னா சாலையைச் சேர்ந்த கௌசர் ஃபாத்திமா (8) என்ற சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்ததில் அச்சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக சிறுமி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அப்பகுதியில் 8 நபர்களை தெரு நாய்கள் கடித்ததில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:பாலியல் சேட்டிங் மூலம் பணம் சம்பாதிக்குமாறு மனைவியை துன்புறுத்திய கணவர்

ABOUT THE AUTHOR

...view details