தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மற்ற கட்சியினர் நிழல்கூட என் மீது விழாது; திமுக கட்சிக்கும் கரை வேட்டிக்கும் துரோகம் விளைப்பவர்கள் கடைந்தெடுத்த துரோகிகள் - துரைமுருகன் - திமுக கட்சிக்கும் கரை வேட்டிக்கும் துரோகம் விளைப்பவர்கள் கடைந்தெடுத்த துரோகிகள் துரைமுருகன்

திமுகவுக்கு துரோகம் விளைப்பவர்கள் கடைந்தெடுத்த துரோகிகள் அவர்கள் 24 மணி நேரத்தில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துரைமுருகன்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

By

Published : Feb 15, 2022, 12:31 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம் ஆட்சி' என்று காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

மற்ற கட்சியினர் நிழல்கூட என் மீது விழாது துரைமுருகன்

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாணியம்பாடி நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களை ஆதரித்து, வாணியம்பாடியில் திமுக பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரப்புரை மேற்கொண்டார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்

அப்பொழுது பேசிய அவர், "ஒரு வருடத்திற்கு பிறகு பொதுக் கூட்டத்தில் பேசுகிறேன் புதியதாக இருக்கிறது. வாணியம்பாடியில் தான் நான் படித்தேன். வாணியம்பாடி மக்கள் தான் எனது மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கினர். ஆகையால் வாணியம்பாடிக்கு தேவையானதை செய்வது எங்களது முதல் கடமையாக கருதுகிறேன்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பரப்புரை

கரோனா, மழை வெள்ளத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் நிதி நிலை அறிக்கை படிக்கப்படுகிறது. அந்த நிதி நிலை அறிக்கையில் நாங்கள் என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோமோ அதை வரிசையாக நிறைவேற்றுவோம். மேலும் கரோனா மற்றும் மழை வெள்ளம் இரண்டும் பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை

இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை, பாஜக ஆளுகின்ற மற்ற மாநிலங்களில் குறைவான மழை பெய்தது. ஆனால் அவர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். முதலமைச்சரும் நானும் பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதி பாக்கி இருக்கிறது என்பதை விளக்கினோம்.

திமுக கட்சிக்கும் கரை வேட்டிக்கும் துரோகம் விளைப்பவர்கள் கடைந்தெடுத்த துரோகிகள் .,,துரைமுருகன்

அதற்கு பிரதமர் ஒரு மாதத்திற்குள் பட்டுவாடா செய்யப்படும் என கூறினார். இதுவரையில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் மத்திய அரசு பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சொன்னதை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார்.

மேலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேறும் நீர் சாத்தனூர் அணைக்கு சென்று பின் வீணாக கடலுக்கு செல்கிறது. அதைத் திருப்பி பாலாற்றுக்கு கொண்டு சேர்க்கும் செயலை துரைமுருகன் செய்யப்போகிறான்.

நான் இருக்கின்ற வரையில் தென்பெண்ணை ஆறு பாலாற்றில் சேர்க்கக் கருதிக்கொண்டிருக்கின்றேன். மேலும் பாலாற்றில் வாணியம்பாடி அருகே இரண்டு செக் டேம்கள் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும். இந்த தேர்தலில் வாணியம்பாடி நகராட்சியில் மற்றவர்கள் வந்தால் ஐந்து ஆண்டுகள் வாணியம்பாடி புறக்கணிக்கப்படும்" என்றார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

கடும் நடவடிக்கை

இதனையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய துரை முருகன், "நான் வீதியில் நடக்கும் போது மற்ற கட்சியினர் நிழல்கூட என் மீது விழாமல் இருக்க ஒதுங்கிச் செல்பவன் நான்.

திமுக கட்சிக்கும் கரை வேட்டிக்கும் துரோகம் விளைப்பவர்கள் கடைந்தெடுத்த துரோகிகள். அவர்கள் 24 மணி நேரத்தில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்.

மேலும் தமிழ்நாட்டில் ஆம்பூர் நகராட்சியில் தான் அதிக ஊழல் நடந்துள்ளது. திமுகவினர் நகர மன்ற தலைவராக வந்த பிறகு அதற்கான விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி மாணவர்கள் 35 பேருக்கு சிறை

ABOUT THE AUTHOR

...view details