திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கும்மிடிக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரனும் நார்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சீனிவாசனும் நார்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியின் தொழில் வரியை பெற்றுக் கொள்ள மாறி மாறி உரிமை கொண்டாடியதால் மாணவ மாணவியர் கும்மிடிக்காம்பட்டி பகுதியில் உள்ள கோயிலில் அமர்ந்து கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ கோபால் என்பவர் நார்சம் பட்டி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கும்மிடிக்கான்ப்பட்டி பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் அமைக்க இடத்தை இலவசமாக அன்றைக்கு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதற்குப் பிறகு குடிசையில் இயங்கிய பள்ளிக்கூடம் படிப்படியாக 2011ஆம் ஆண்டு மேல்நிலை பள்ளி தரத்திற்கு உயர்ந்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று வரை கும்மிடிகான் பட்டி ஊராட்சிக்கு செலுத்துபட்டு வந்த தொழில் வரியை, நார்சம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சீனிவாசன் தற்போது திடீர் என்று தங்கள் ஊராட்சிக்கு தான் தொழில் வரியை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்து ஒரு வாரத்திற்குள் கட்ட தவறினால் தலைமை ஆசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு தொடர்வேன் என்று மிரட்டி சென்றதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.