திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை (ஏப்ரல் 2) ஆம்பூர் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த தனியார் சரக்கு லாரியில் சோதனை மேற்கொண்டபோது அந்த லாரியில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக லாரியைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆம்பூரில் போதைப்பொருள்கள் பறிமுதல் - ஆம்பூர்
திருப்பத்தூர்: ஆம்பூரில் சரக்கு லாரியில் மறைத்து எடுத்துவரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
ஆம்பூரில் போதைப்பொருட்கள் பறிமுதல்
புகாரின்பேரில் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்த ஆம்பூர் நகர காவல் துறையினர் போதைப்பொருள்கள் எடுத்துவந்த லாரியை ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:'தைரியம் இருந்தால்...!' - மோடி, அமித் ஷாவுக்கு சவால்விடுத்த உதயநிதி