திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த எல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
அம்மன் சிலையைச் சுக்குநூறாக உடைத்த நபர் கைது! - அம்மன் சிலையை உடைத்த போதை ஆசாமி கைது
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே அம்மன் சிலையைச் சுக்குநூறாக உடைத்த நபரைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தட்டிக்கேட்ட நபர்களைக் கத்தி, கடப்பாரையைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை 30) இரவு அப்பகுதியில் உள்ள ஶ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கருவறையில் உள்ள அம்மன் சிலையைக் கடப்பாரையைக் கொண்டு சுக்குநூறாக உடைத்து வெளியில் வீசியுள்ளார்.
மேலும் கோயிலில் இருந்த அனைத்துப் பொருள்களையும் சூறையாடி, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த இரண்டு சவரன் தங்க நகை, 25 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி காவல் துறையினர் பாஸ்கரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.