திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜி தலைமையில் தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில சுயாட்சி, திராவிட இயக்க வரலாறு குறித்தும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் திமுகவின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.
அப்போது பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், “பொதுக்குழு திமுகவில் மட்டுமே சரியாக கூட்டப்பட்டு முடிவு எடுக்கபடுகிறது. மற்ற கட்சிகளில் சரியாக பொதுக்குழு நடைபெறுவதும் இல்லை, அவ்வாறு நடைபெற்றாலும் பொதுக்குழுவில் நிறைவேற்றும் தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? நீதிமன்றம் தான் முடிவு எடுக்கிறது.
காலில் செருப்பு அணியாமல், அடிமைகளாக இருந்தவர்களை அனைவரும் சமமானவர்கள் என்று எடுத்து காட்டி பணிந்து இடுப்பில் பழைய துண்டை தோளில் போட வைத்து சுயமரியாதையை காப்பாற்றிய இயக்கம் திராவிட இயக்ககம்.
தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் ஒரு சட்டத்தை கொண்டுவர தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை சட்டமாக்க முடியாது. சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை மக்களுக்கே தொடர்பு இல்லாத ஆளுநர் ஒப்புதலை பெற்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மத்திய அரசின் அனுமதி பெற்று பின்னர் தான் அதை சட்டமாக்க முடியும். இல்லையென்றால் அது வெறும் மசோதா மட்டுமே.
திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான். நமக்கு அதிகாரம் இருப்பதுபோல் இருக்கிறது. ஆனால் உண்மையில் அதிகாரம் இல்லை” என பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்புப் பணி - தலைமைச் செயலாளர் ஆய்வு